1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
  4. BJP candidate ask for revoting in vayanad booth

வயநாடு வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறு – மறுவாக்குப்பதிவு கேட்கும் பாஜக கூட்டணி வேட்பாளர் !

வயநாடு
இன்று 3 ஆவது கட்டமாக தொடங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் கேரளா மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு கேட்டுள்ளார் பாஜக கூட்டணி வேட்பாளர்.

கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இம்முறை சிறப்புக்கவனம் பெற்ற தொகுதியாக மாறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் முதன் முதலாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தென் இந்தியாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதே ஆகும். அவரை எதிர்த்து பாஜக சார்பில் கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகிறார்.

இதையடுத்து 3 ஆவது கட்ட வாக்குப்பதிவை அடுத்து இன்று கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வயநாடு தொகுதிக்குட்பட்ட சிஎம் எஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருமுறை பட்டனை அழுத்தினாலும் வாக்கு பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனையடுத்து அத்தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவரான துஷார் வெள்ளப்பள்ளி தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சம்மந்தப்பட்ட தொகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
குட்கா வழக்கில் சிக்கியவர்களுக்கு ஜாமீன் – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு !