'கை'க்கு ஓட்டு போட்டால் 'தாமரை'க்கு போகிறது: கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு

Last Modified செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (10:19 IST)
கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி உள்பட 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக என மும்முனை போட்டி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கை சின்னத்துக்கு வாக்களித்தால் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டுவதாக கேரள காங்கிரஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

கொல்லம் தொகுதியில் பாலகோபால் என்பவர் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகவும், ராஜ்மோகன் உன்னிதன் என்பவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும், கே.வி.சபு என்பவர் பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :