திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (10:01 IST)

மோடிக்கு எதிராக போட்டி ? – பிரியங்காவின் ரியாக்‌ஷன் !

மோடிக்கு எதிராகப் போட்டியிடுவதாக உலாவரும் செய்திகளுக்கு நேற்று கேரளாவில் பிரியங்கா காந்தி பதில் அளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியின் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே அவர் மீது தேர்தல் சாயம் பூசப்பட்டு வருகிறது. மோடி பிரியங்கா காந்தி என்மகள் போன்றவர் என்று கூறியதற்குப் பதிலளித்த அவர் ‘ நான் ராஜீவ்வின் மகள்’ எனக் கூறினாள்.

இதையடுத்து மோடியை எதிர்த்து வாரனாசியில் பிரியங்கா போட்டியிடப் போவதாக செய்திகள் உலாவர ஆரம்பித்தன. இது சம்மந்தமாக தொண்டர் ஒருவர் பிரியங்காவிடம் கேள்வி எழுப்பியபோது ’நான் மோடியை எதிர்த்து போட்டியிடக்கூடாதா ? ‘ என எதிர்க்கேள்வி கேட்டார்.

அதையடுத்து கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று அவர் கேரளா வந்தார். அப்போது இதேக் கேள்வியை செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது ‘காங்கிரஸ் தலைமைக் கேட்டுக்கொண்டால், கட்சி விரும்பினால் பிரதமர் மோடியை எதிர்த்து மகிழ்ச்சியோடு போட்டியிடுவேன் ’ என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.