தொடர்புடைய செய்திகள்
- அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை: சவரன் ரூ.1,09,600-ஐ எட்டியது!
- அவசர அவசரமாக தங்கத்தை விற்கும் பொதுமக்கள்.. 3 மாதங்களில் 50000 கிலோ விற்பனையா?
- தங்கம் வாங்காதீங்க!.. மோடி சொல்லியும் மக்கள் கேட்கலயே!.. அட போங்கப்பா!...
- பிரதமர் மோடி சொல்லியும் தங்கம் வாங்குவதை குறைக்காத இந்தியர்கள்.. இறக்குமதி அளவு அதிகரிப்பு...!
- சென்னையில் 4 நாளில் 4000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்றைய சந்தை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கும் மற்றும் சவரனுக்கும் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று ஆபரணத் தங்கம் வாங்குவோருக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 வரை குறைந்து விற்பனையாகிறது. 1 கிராம் தங்கம் விலை ரூ. 13,150க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் உலகளாவிய சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த வார இறுதி முதல் தங்கம் விலை சற்றே ஏறுமுகமாக இருந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு, திருமண சீசனை முன்னிட்டு நகை வாங்கத் திட்டமிட்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு ஒரு சாதகமான செய்தியாக அமைந்துள்ளது.
இருப்பினும், தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயைத் தாண்டியே நீடித்து வருவதால், சந்தை நிபுணர்கள் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குபவர்கள் விலையைத் தொடர்ந்து கவனித்து வருமாறு கூறுகிறார்கள்.
