வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (07:05 IST)

இன்று 3ஆம் கட்ட வாக்குப்பதிவு: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் தேர்தல்?

மக்களவை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஏற்கனவே ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது, இன்று மொத்தம் 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை
 
குஜராத் - 26 தொகுதிகள் 
கோவா - 2 தொகுதிகள் 
கேரளா - 20 தொகுதிகள்
 
இன்று ஒருசில பகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை
 
கர்நாடகா - 14 தொகுதிகள்
மகாராஷ்டிரா - 14 தொகுதிகள்
உத்தரபிரதேசம் - 10 தொகுதிகள்
சத்தீஸ்கர் - 7 தொகுதிகள்
ஒடிஸா - 6 தொகுதிகள்
மேற்கு வங்கம் 5 தொகுதிகள்
பீகார் - 5 தொகுதிகள்
அசாம் - 4 தொகுதிகள்
ஜம்மு காஷ்மீர் - 1 தொகுதி
திரிபுரா - 1 தொகுதி
தாத்ரா நகர் ஹாவேலி - 1
டாமன் டையூ - 1
 
அதேபோல் மக்களவை தேர்தலுடன் ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பயமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.