1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Today gold and silver rate at chennai

நீண்ட இடைவெளிக்கு பின் தங்கம் விலை சரிவு: சென்னை நிலவரம்!

gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4795.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 38360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5197.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41576.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 63.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!