ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (08:40 IST)

Commonwealth போட்டியில் அடுத்தடுத்து தங்கம்..! – இந்திய வீரர்கள் சாதனை!

Commonwealth
லண்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் (Commonwealth 2022) போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர்.

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்காமில் கடந்த ஜூலை 28ல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 72 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடி வருகின்றனர்.

காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியா எந்த பதக்கமும் வெல்லாத நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்றார். மேலும் சங்கேத் மஹாதேவ், பிந்த்யாராணி உள்ளிட்டோர் வெள்ளி பதக்கமும், குருராஜ் பூஜாரி வெண்கல பதக்கமும் வென்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் லால்ரினுகா ஜெரிமி ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

73 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி மொத்தமாக 131 கிலோ பளுதூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.