புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (09:34 IST)

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

sensex
கடந்த இரண்டு வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்து வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளதால் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து 56732 என்ற புள்ளியில் சென்செக்ஸ் விற்பனையாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 17218 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்செக்ஸ் 58 ஆயிரத்தை நெருங்கி வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். உச்சபட்ச சென்செக்ஸ் புள்ளிகளான 62 ஆயிரத்தை மிக விரைவில் பங்குச் சந்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது