1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rain in five districts today says chennai meteorological center

இன்னும் சில மணி நேரங்களில் மாவட்டங்களில் கனமழை: வானிலை அறிவிப்பு

rain
தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தர்மபுரி, சேலம், நாமக்க,ல் திருச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது 
 
நாளை அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதிநீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்
 
மேலும் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
பி.பார்ம், நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது?