சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (07:34 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பில் இன்றும் விலையில் மாற்றமில்லை என அறிவித்துள்ளன
 
இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெட்ரோல்-டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.