நேபாள வெள்ளத்தில் சிக்கிய 39 தமிழர்கள் திபெத்தில் மீட்பு!.. விரைவில் தமிழகம் திரும்புகிறார்கள்!...
வெப்பம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உடைந்து பணி சரிவு ஏற்பபட்டு சீனா - திபெத் எல்லையில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து அங்கே செயற்கை ஏரி உருவாகி அதன்பின் அந்த ஏரியும் உடைந்து அதிலிருந்து வெள்ளம் வேகமாக வெளியேறியதால் நேபாளம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
நேபாளத்தில் வீடுகள், கட்டிடங்கள், கார் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நேபாளத்தில் நான்கு ஊர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் இறந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது. 400 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள்..
அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஒருபக்கம் தமிழகத்தில் கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கைலாச யாத்திரைக்காக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களும் அங்கே சிக்கியிருக்கிறார்கள்..
அவர்களில் 20 பேர் மீட்கப்பட்டு அவர்கள் நேற்று தமிழக அரசு உதவியுடன் விமான மூலம் சென்னை வந்தனர். பின்னணியில் நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 39 தமிழர்கள் திபெத்தில் பத்திரமாக இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. அந்த 39 பேரையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த செய்தி மகிழ்ச்சிதான் என்றாலும் இன்னும் 50க்கும் மேற்பட்ட தமிழர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.