நேபாள வெள்ளம்!.. 1924 பேரை காணவில்லை.. 579 உடல்கள் மீட்பு!..
நேபாளத்தின் போடே கோஷி நதியில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளம் முழுவதும் உருக்குலைந்து போனது. போடா கோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிப்பாறைகள் தடுத்ததால் அந்த இடத்தில் செயற்கையாக ஒரு ஏரி உருவாகி அந்த ஏரி உடைந்து காற்றாற்று வெள்ளம் போல நீர் வெளியாகி நேபாளத்திற்குள் புகுந்ததாக சொல்லப்படுகிறது..
அப்படி வெள்ளம் புரண்டு வரும் போது வழியில் இருந்த பாறைகள், மண், சேறு, கட்டிடங்கள். வீடுகள், வாகனங்கள் என எல்லாவற்றையும் வாரிசுருட்டி சென்றது.
அந்த வெள்ளத்தில் மக்களும் பலரும் சிக்கினார்கள். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 529 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், 1924 பேரை காணவில்லை எனவும் நேபாள அரசு அறிவித்திருக்கிறது. ஆனாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 பேராக இருக்கலாம் எனவும், 2500 பேர் மாயமாகியிருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது. அதேபோல், இதுவரை மீட்கப்பட்டவர்களில் இந்தியர்களே அதிகவும், நேபாளிகள் ஒருவர் கூட மீட்கப்படவில்லை எனவும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.