1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. nepal govt say we dont need any help

எங்களுக்கு யாருடைய உதவியும் வேணாம்!.. நேபாள அரசு மறுப்பு!..

nepal
நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பல வீடுகளும், கட்டிடங்களும், கார் உள்ளிட்ட ஏராளமான கனரக வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

அதேபோல் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் காணாமல் போயிருக்கிறார்கள். அதில் 320 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 100 பேரும் நிலை என்னவென தெரியவில்லை என வெளியூறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு நேபாளத்திற்கு உதவுவதற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், இலங்கை, தென் கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன..

இதற்காக அந்த நாடுகள் நேபாள நாட்டிடம் அனுமதி கூறியிருந்தனர். ஆனால் எங்களிடமே திறமை வாய்ந்த மீட்பது குழுவினர் இருக்கிறார்கள்... வெளிநாடுகளின் உதவி தேவை இல்லை என நேபாள நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது...
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாளம் பேரிடர்.. உயிரை காப்பாற்றி கொள்ள சீனாவில் தஞ்சமடைந்த 400 இந்தியர்கள்...