எனக்கு மாரியாதை முக்கியம்!. திருச்சியில் நான் போட்டியிடல!.. யூடர்ன் போட்ட ராகவா லாரன்ஸ்!..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தனது தலைவராக கொண்டவர். பல வருடங்களாக கஷ்டப்படும் பலருக்கும் இவர் உதவி செய்துள்ளார். மேலும் ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து ஆசிரத்தையும் இவர் நடத்தி வருகிறார். இந்நிலையில்தன, திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக ர்பாக ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது..
இதுபற்றி ஏற்கனவே ஒரு வீடியோவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் இப்போது எனக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்திருக்கிறது. அதற்கான சூழலும் அமைந்திருக்கிறது.. விரைவில் எனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியிருக்கும் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திருச்சி கிழக்கில் நான் நிற்பது தர்மமே இல்லை.. அதற்காக நான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும் சொல்ல முடியாது.. அவசரம் வேண்டாம் என பொடி வைத்து பேசியுள்ளார்.
மேலும் எங்கு நமக்கு நல்ல மரியாதை கிடைக்கும், யாருடன் சேர்ந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றெல்லாம் யோசித்தான் முடிவெடுப்பேன். இவ்வளவு நாள் உழைத்து காப்பாற்றி வைத்த பெயரை ஒருவரிடம் சரண்டர் செய்து அவருக்காக உழைக்கப் போகிறோம் என்றால் அங்கு பொறுப்பு கிடைப்பதை விட மரியாதைதான் முக்கியம் என அவர் கூறியிருக்கிறார்.
லாரன்ஸ் சொல்வதை பார்க்கும் போது தவெகவில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என கணிக்கப்படுகிறது.