இன்று முடிவை அறிவிக்கிறார் ராகவா லாரன்ஸ்.. குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்...
பிரபல தமிழ் சினிமா நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இன்று மதியம் சரியாக 12:00 மணிக்கு இரண்டு மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி, தன்னுடைய விளக்கத்தை அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம், இன்று நான் இரண்டு முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருச்சி தேர்தல் தொடர்பான ஒரு விளக்கம் மற்றும் எனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவை பற்றியது தான் அது. இந்த இரண்டு தலைப்புகள் குறித்தும் இன்று மதியம் 12:00 மணிக்கு நான் உங்களிடம் பேசவுள்ளேன்" என்று லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக திருச்சி கிழக்கு தேர்தல் விவகாரங்கள் குறித்தும், ராகவா லாரன்ஸின் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு குறித்தும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறு விவாதங்களும் கருத்துகளும் பரவி வந்தன. இந்தச் சூழலில், லாரன்ஸ் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேரிடையாக விளக்கம் அளிக்க முன்வந்திருப்பது ரசிகர்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதியம் 12 மணிக்கு அவர் அளிக்கப்போகும் இந்த அதிரடி விளக்கம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்தத் திரைத்துறையும் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Edited by Siva
