தவெக தலைமையில் புதிய கூட்டணி!. விஜய் போடும் ஸ்கெட்ச்!. தனித்துவிடப்படுகிறதா திமுக?!..

திங்கள், 29 ஜூன் 2026 (13:48 IST)
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. அதோடு, தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தவெகைன் அமைச்சரவையிலேயே அந்த கட்சிகள் இணைந்து விட்டதால் இனி வரும் காலத்தில் அந்த கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்குமா? இல்லை தவெகவுடன் கூட்டணி அமைக்குமா? என்கிற கேள்வி எழுந்ததிருக்கிறது. ஒரு பக்கம் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகளை திமுகவினர் கடுமையாக திட்டி வருகிறார்கள். இதற்கு அந்த கட்சியினர் விளக்கம் சொல்லி வருகிறார்கள்.

தற்போது திமுக கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகிறது. காங்கிரஸ் ஏற்கனவே வெளியேறிவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என அறிவித்துவிட்டது. மற்ற கட்சிகளும் அந்த கூட்டணியிலிருந்து விரைவில் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான்,  வருகிற ஜூலை 1ம் தேதி தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே விசிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க தவெக திட்டமிட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எந்த கட்சியெல்லாம் கலந்து கொள்கிறார்களோ அவர்களெல்லாம் இனிமேல் தவெக கூட்டணியில் நீடிப்பர்கள் என கருதப்படுகிறது. இதன் மூலம் திமுக தனித்துவிடப்படும் நிலைக்கு சென்றுள்ளது.<>

எல்லாம் காட்டு

சோகம்!.. வெனிசுலா நிலநடுக்கத்தில் குடும்பத்தை இழந்த கால்பந்து வீரர்!..

பொறாமையில் பறிபோன சிறுமியின் உயிர்!.. சொந்த அத்தையே செய்த கொடூரம்!..

அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பிரேமலதா விஜயகாந்த்.. உணவு சூப்பர் என பாராட்டு...

முதலமைச்சரான பின் முதல்முறையாக கரூர் செல்கிறார் விஜய்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க திட்டம்...

இது வெறும் டிரைலர் தான்.. சாலை மறியல் போராட்டத்தின்போது சேகர்பாபு பேட்டி...

அடுத்த கட்டுரையில்
Show comments