1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk remove minister poste from ghilli sarath

கோபத்தில் விஜய்!. கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?!. தவெகவில் நடப்பது என்ன?..

ghilli
மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத் போதைப்பொருள் பயன்படுத்துவது போல சமீபத்தில் வெளியான வீடியோ தவெக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் அமைச்சரோ ‘அது போதை மருந்து இல்லை.. என் குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்தேன்.. என்னைப் பற்றி தவறாக பேசுகிறார்கள்’ என்று விளக்கமளித்தார்.

இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. போதை பொருளை தடுப்போம் என்னும் சொல்லும் தவெகவில் ஒரு அமைச்சரே இப்படி செய்திருக்கிறார்.. அவரிடமிருந்து அமைச்சர் பதவியை பறிக்கவேண்டு என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். மேலும், இதைக் கண்டித்து திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் இன்று போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது..

புஸ்ஸி ஆனந்தை அழைத்து விஜய் கண்டித்ததாகவும், விரைவில் கில்லி சரதிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படும் எனவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஆனந்தை சந்தித்து ‘நான் விளையாட்டாக செய்ததை அரசியல் ஆக்குகிறார்கள்’ என கில்லி சரத்  சொல்லியதாகவும், அதற்கு ‘விஷயம் தளபதிக்கு சென்று விட்டது.. அவர் எடுப்பதே இறுதி முடிவு’ என ஆனந்த் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் சரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அது தவெகவுக்கு கெட்ட பெயராக அமையும் என்பதால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம் நடைபெறும் போது கில்லி சரத்திடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..