1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. netanyagu denied america cant control israel

ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது!.. அடம் பிடிக்கும் இஸ்ரேல்!...

israel
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முடிய கடந்த 4 மாதங்களாகவே போர் நீடித்து வந்த நிலையில் பாகிஸ்தானில் முயற்சி காரணமாக தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்படி ஏற்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் ஹார்மூச் நீரிணையில் அவ்வப்போது இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்கின்றன.

ஒருபக்கம் ஈரானுடனான் போரை முடிவுக்கு கொண்டு வர நினைக்கும் அமெரிக்கா அதற்காக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறோம். அதோடு போர் முடிவுக்கு வருகிறது. அதன்பின் ஹார்மூஸ் நீரிணை திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று காலை கூறியிருந்தார்..

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ‘ஈரானுடனான ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது.. இஸ்ரேல் அமெரிக்காவிற்கு உட்பட்ட நாடல்ல.. நாங்கள் சுதந்திரமானவர்கள்.. ஒவ்வொரு முறையும் நாங்கள் சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்தபோது அதற்கான விலையை கொடுத்தோம். லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் ஒவ்வொரு ட்ரோனும், ஏவுகணையும் எங்களது தாக்குதலுக்கு வழிவகுக்கும்’ எனக் கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
3 வயது சிறுமி வன்கொடுமை!.. பிஸ்கெட் வாங்கி தருவதாக கூட்டிச் சென்று!.. வடமாநில வாலிபர் பகீர் வாக்குமூலம்...