1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump says today we will sign on iran

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகுமா?.. டிரம்ப் சொல்வது நடக்குமா?...

donald
ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பட்டு போர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் முழுவதுமாக போர் நின்றபாடில்லை.

ஹார்மூஸ் நீரிணையில் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்றை தாக்கிக் கொள்கின்றனர்
. ஒருபக்கம் ஈரானிடம் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஆனால் அமெரிக்காவின் நிபந்தனைகள் பலவற்றை ஈரான் ஏற்கவில்லை. குறிப்பாக ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என அமெரிக்கா சொல்கிறது. ஆனால் ஈரான் அதை ஏற்க மறுக்கிறது. இதனால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது..

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘அமெரிக்கா - ஈரான் இடையான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும். ஒப்பந்தம் இறுதியானதும் ஹார்மூஸ் நீரினை உடனே திறக்கப்படும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து நிலவும் மோதல் முடிவுக்கு வரும். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் ஒப்பந்தம் இருக்கும். அனைத்தும் சுமூகமாக முடிந்தால் ஈரானின் மீதமுள்ள அணு ஆயுதங்களை அமெரிக்க அழிக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

இதை ஈரான் ஏற்குமா என்பது தெரியவில்லை. ஈரான் ஏற்கவில்லையென்றால் ண்டிப்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்றே கணிக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
என் போட்டோவை யூஸ் பண்ணக்கூடாது!.. லாரன்ஸ், அண்ணாமலைக்கு செக் வைத்த ரஜினி!..