தொடர்புடைய செய்திகள்
- கும்மிடிபூண்டியில் 3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை என்ற தகவல் பொய்யானது.. கனிமொழி குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம்..
- 3 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்!.. புதரில் வீசப்பட்ட சிறுமி மரணம்!...
- பெண்ணிடம் பாலியல் சீண்டல்!.. தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!..
- 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம்!.. திருச்சியில் அதிர்ச்சி...
- கோவை சூலூர் சிறுமி கொலை!.. சிறையில் கார்த்தியை கடுமையாக தாக்கிய கைதிகள்!...
3 வயது சிறுமி வன்கொடுமை!.. பிஸ்கெட் வாங்கி தருவதாக கூட்டிச் சென்று!.. வடமாநில வாலிபர் பகீர் வாக்குமூலம்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கும்மிடிப்பூண்டி அருகே வசித்து வந்த வடமாநில பெண்ணின் குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு ஒரு புதரில் வீசப்பட்டிருந்தது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டவுடன் அவர்கள் குழந்தையை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி மரணமடைந்தார்.
இது தொடர்பாக வட மாநில வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மது போதையில் இருந்தபோது பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி மூன்று வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை அவன் ஒப்புக் கொண்டான்.
குழந்தை பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சென்னை அரசு தலைமை மருத்துவர் விஜிலா சிறுமியின் உடலில் அதிக ரத்த போக்கு இருந்தது.. சிறுமியின் பிறப்புறுப்பில் தசை கிழிந்திருந்தது.. குழந்தை அதிர்ச்சியிலிருந்து மீளாததால் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். ஒருபக்கம், சிறுமியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.