1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump says we will attack iran again

ஈரான் கையெழுத்து போடலனா போர்தான்!.. இஸ்ரேலை காப்பாத்திட்டேன்!. டிரம்ப் அதிரடி...

america
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில், பாகிஸ்தானின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஈரானுடன் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படும் முயற்சியில் அமெரிக்க இறங்கியிருக்கிறது. இதற்காக ஒரு புதிய ஒப்பந்தமும் தயார் செய்யப்பட்டிருக்கிறது..

ஆனால் அமெரிக்கா உருவாக்கிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்துடுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என அமெரிக்கா சொல்கிறது. ஈரான் அதை ஏற்க வாய்ப்பில்லை. அதேபோல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஈரானில் உள்ள அணு ஆயுதங்களை அமெரிக்கா அழிக்கும் என்ற ட்ரம்ப் சொல்லியிருக்கிறார். ஈரான் இதை ஏற்க வாய்ப்பில்லை. ஆனால் ட்ரம்போ வருகிற வெள்ளிக்கிழமை அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனக் கூறியிருக்கிறார்..

இன்று அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘அமெரிக்காவுடன் இறுதி அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள தவறினால் ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படும். போர் இல்லாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அதற்கு பதிலாக அந்நாடுகளின் 20 சதவீத வருவாயை அமெரிக்கா பெற்றுக் கொள்ளும்’ எனக்கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 இன்று கிரெடிட்!.. 2500 எப்போ கிடைக்கும்?..