1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. more than thousand people missing in nepal china border

நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!.. தேடும் பணி தீவிரம்!...

nepal
வடக்கு நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலரும் உயிரிழந்தனர். பல வீடுகளும் கட்டிடங்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்ற 83 பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது..

ஒருபக்கம் நேபாளம் - சீன எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 1400 பேர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தில் 500 வெளிநாட்டினர் உட்பட 826 பேரும், சீனாவில் 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேரும் மாயமாகியிருப்பதாக அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாளத்தில் வெள்ளம்!.. 83 தமிழர்களின் நிலை என்ன?.. ராஜ்மோகன் விளக்கம்!..