1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. nearly four hundred missing in nepal waterflood

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...

nepal
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் 19 பாலங்கள், 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அடித்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 3 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளது எனவும், 200-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அடித்து செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

திபெத் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் போது உருவான மண் மற்றும் பாறைகள் ஆற்றுப் பாதையை அடைத்ததால் தேங்கிய நீர் திடீரென உடைப்பெடுத்து வெள்ளமாக மாறிவிட்டதாக நேபாள வெளியூறவு துறை அமைச்சர் கூறியிருக்கிறார். ஒருபக்கம், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அங்கு சுற்றுலா சென்ற 105 இந்தியர்கள் உட்பட 384 பேர் மாயமாகியுள்ளனர்.

இதில் 291 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். 93 பேர் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளை சேர்ந்தவர்களில் 105 பேர் இந்தியர்கள்.. 37 பேர் வெளிநாடு இந்தியர்கள் என சொல்லப்படுகிறது. இதுபோக அமெரிக்கா, மலேசியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா வந்தவர்களும் மாயமாகியுள்ளனர்.

அதேபோல், தமிழ்நாடு கும்பகோணத்தில் இருந்து 57 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்கிற விசாரணையும் நடைபெற்று வருகிறது.. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....