1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rajmohan talk about mising tamilans in nepal

நேபாளத்தில் வெள்ளம்!.. 83 தமிழர்களின் நிலை என்ன?.. ராஜ்மோகன் விளக்கம்!..

raj mohan
நேற்று வட நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகளும்,  பல வாகனங்களும், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் நீரில் அடித்து சொல்லப்பட்டன. 40க்கும் மேற்பட்ட ஊரையே வெள்ளம் காலி செய்து விட்டது.  வெள்ளத்தில் சிக்கி பலரும் உயிரிழந்தனர்.

ஒருபக்கம் இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் மாயமாகியிருக்கிறார்கள்.. 500 பேருக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என சொல்லப்படுகிறது. ஒருபக்கம் தமிழ்நாட்டிலிருந்தும் நேபாளத்திற்கு பலரும் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களில் 20 பேர் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறார்கள். 347 பேர் மாயாமகியுள்ளனர்.

நேபாள நாட்டின் கைலாஷ் யாத்திரைக்கு 103 தமிழர்கள் பல குழுக்களாக சென்றுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இயங்கி வரும் சூப்பர் யாத்ரா என்ற நிறுவனம் சார்பில் 54 பேரும், சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறுவனம் மூலம் 49 பேரும் நேபாளத்திற்கு சென்றிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. மாயமான தமிழர்களின் முழு விவரங்களை சேகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருக்கிறார்..

மேலும், நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 34 தமிழர்கள் தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. நேபாள போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுடனும் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பாக இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளன’ என அவர் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எல்லாரும் நேபாளத்துக்கு போங்க!... அமைச்சர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு...