1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. iran attacked ameirc flight cost many thousand crores

ஒரே அடி!.. அமெரிக்காவின் 4750 கோடி விமானத்தை இரண்டாக பிளந்த ஈரான்!..

iran
அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என சொல்லி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. போர் துவங்கி அடுத்த நாளே ஈரான் தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். எனவே, ஈரான் எப்படியும் படிந்து விடும். அமெரிக்காவின் ஆதரவு அதிபரை ஈரானில் அமரவைத்து அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அந்த நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை அள்ளிவிடலாம் என்று டொனால்ட் டிரம்ப் கணக்கு போட்டார்.

ஆனால், ஈரான் திருப்பி தாக்க துவங்கியது. அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் அமைந்துள்ள துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதாபி போன்ற வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தொடர் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவது அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது.. ஈரான் இப்படி திருப்பி தாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என டொனல்ட் டிரம்பே கூறியிருந்தார்.

ஈரானிடம் இப்படிப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை அமெரிக்காவுக்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஏவுகணையை அனுப்பி இந்திய பெருங்கடலில் இருந்த அமெரிக்கா கப்பலை குறிவைத்து ஈரான் தாக்கியதால் அமெரிக்காவை அதிர்ந்து போனது.

இந்நிலையில்தான், சவுதியில் சுல்தான் விமானப்படைத்தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் மிக முக்கிய E - 3Gவான் கண்காணிப்பு ரேடார் விமானம் இரண்டாக பிளந்து நொறுங்கியது. இந்த விமானத்தின் மதிப்பு சுமார் இந்திய மதிப்பில் 4750 கோடி என சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் வானில் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவுக்கு குறி!.. அதிநவீன ஏவுகனை என்ஜினை பரிசோனை செய்த வட கொரியா!...