ஈரான் போர்!.. டிரம்புக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கர்கள்!. மாபெரும் போராட்டம்..
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் பல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அதிக வரியை விதித்தார். இந்தியா ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றார். வெனிசுலா அதிபரை கைது செய்து சிறையில் அடைத்தார்.. கிரீன்லாந்து, கியூபா நாடுகளை நாங்கள் கைப்பற்றுவோம் எனக் கூறி வருகிறார்..
ஒருபக்கம் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் செய்யக்கூடாது என சொல்லி அந்த நாட்டின் மீதும் போர் தொடுத்தார். அந்தபோரில் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே நடந்து வரும் இந்த போரால் ஈரான் கடுமையான சேதத்தை சந்தித்திருக்கிறது.. ஒருபக்கம் அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இடம் கொடுத்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது..
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் வருவது தடைபட்டிருக்கிறது. அதனால் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் ட்ரம்பின் நடவடிக்கையால் அமெரிக்கா மக்களும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். டிரம்புக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். No Kings In America என்கிற வாசகத்துடன் டிரம்பை கண்டித்து போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது ட்ரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.