1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai gold price gone down againt today

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!. இன்றைய நிலவரம்....

gold price
சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்று ஒரு லட்சத்தை தொட்டது. அதன்பின் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டியது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவது, உயர்வது என மாறி மாறி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து 13,220-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலையில் கிராமுக்கு நூறு ரூபாய் உயர்ந்தது..

நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.30ம், ஒரு சவரனுக்கு 240ம் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 350க்கும் ஒரு பவுன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.. கிராமுக்கு 50-ம் ஒரு சவரனுக்கு 400ம் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ஆயிரத்து 300க்கும், ஒரு பவுன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் 240க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.