மட்டனுக்கு பதில் சிக்கன்!.. கல்யாண வீட்டில் அடிதடி!.. மருத்துவமனையில் பலரும் அனுமதி!...
தற்போதல்லாம் திருமணங்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக கூட நின்று விடுகிறது சமீபத்தில் கூட திருமண ஊர்வலத்தில் மணமகளை நடனம் ஆடக்கூடாது என மணமகன் சொன்னதால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி வெளியானது.
வட மாநிலங்களில் திருமண விழாக்களில் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. அதில், விருந்தில் அசைவ உணவு பரிமாறப்படவில்லை என்பதற்காக பெண் வீட்டினருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் பலமுறை மோதல் வந்த செய்திகள் பலமுறை வெளியாகியிருக்கிறது
இந்நிலையில், பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ராஜன்பூர் கிராமத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண விருந்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு மட்டன் பரிமாறுவதாக மணமகள் வீட்டார் சொல்லியிருந்தனர். ஆனால், விருந்தின் போது சிக்கன் பரிமாறப்பட்டது.
இதையடுத்து, ஆண் வீட்டாருக்கும், பெண் வீட்டாருகும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. போலீசார் அங்கு சென்று கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மோதலில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.