தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்: அண்ணாமலை
- சென்னையில் அடுத்தடுத்து பெண்கள், சிறுமிகள் மீது தாக்குதல்: 12 பேர் கைது, முதல்வர் விஜய் மௌனம் குறித்து ஸ்டாலின் கேள்வி!
- அண்ணாமலைக்கும், ஆட்டு மந்தைகளுக்கும் பாஜக கொள்கை புரியவில்லை: வேலூர் இப்ராஹிம் விமர்சனம்!
- என் போட்டோவை யூஸ் பண்ணக்கூடாது!.. லாரன்ஸ், அண்ணாமலைக்கு செக் வைத்த ரஜினி!..
- அண்ணாமலை இயக்கத்தில் ரஜினியின் மருமகன்!.. எல்லாம் பிளானா?..
வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..
தமிழக பாஜக தலைவர்களில் முக்கியமானவர் அண்ணாமலை. இன்னும் சொல்லப் போனால் இவர் தமிழக பாஜக தலைவரான பின்புதான் தமிழகத்தில் இந்த கட்சி கொஞ்சம் வளர்ந்தது. தினமும் செய்தியாளர்களை சந்திப்பது திமுகவை விமர்சிப்பது என அரசியல் செய்து வந்தார்.
தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்ததற்கு அண்ணாமலை முக்கிய காரணம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரின் பதவி பறிபோனது. அவருக்கு பின் நயினார் நாகேந்திரன் அந்த பதவியில் அமர வைக்கப்பட்டார். எனவே பாஜகவிலிருந்து விலகுவது என அண்ணாமலை முடிவெடுத்தார். டெல்லி சென்று பாஜக மேலிடத்தில் சிலரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அண்ணாமலி கொடுத்தார். அதோடு ஒரு புதிய இயக்கத்தையும் தொடங்குவதாக அறிவித்து அது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டார்..
இந்நிலையில், அண்ணாமலை துவங்கிய வீ த லீடர் இயக்கத்தில் இதுவரை 19 லட்சம் பேர் இணைந்து விட்டனர். இந்நிலையில், இந்த இயக்கத்தின் முதல் மாநாடு நாளை ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியில் நடக்கிறது. அதன்படி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி கொங்குசிட்டி மைதானத்தில் நாளை முதல் மாநாடு நடக்கவிருக்கிறது.
இதில் அண்ணாமலையின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். மேலும், 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது..