தொடர்புடைய செய்திகள்
- இந்தியா எங்ககிட்ட ஆயில் வாங்கலனா ஒன்னும் பிரச்சன இல்லை!.. ரஷ்யா கமெண்ட்!...
- இந்தியா அப்படி எங்ககிட்ட எதுவும் சொல்லயே!.. டிரம்ப்பை கடுப்பேத்திய ரஷ்யா!...
- இந்தியாவுக்கு வரி போடுவேன்!.. டிரம்ப் ஏற்றியதும்.. இறக்கியதும்!.. வரி கடந்து வந்த பாதை!....
- இனிமே நாங்க அண்ணன் - தம்பி!. வரியை குறைச்சிட்டேன்!.. இறங்கிவந்த டிரம்ப்!...
- பெரிய போர்க்கப்பல் ஆன் தி வே!.. சரண்டர் ஆகுங்க!. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!...
இந்தியாவுக்கான 25 சதவீத வரி முழுவதும் ரத்து!. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!...
ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிக்கும் என தொடர்ந்து மிரட்டி வந்தார்.
சொன்னது போலவே இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். மேலும், கூடுதல் வரியாக மேலும் 25 சதவீத வரியையும் விதித்தார். இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை இந்தியா செலுத்த வேண்டியிருந்தது.. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது.
அதேநேரம், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய பொருட்களுக்கான 25 சதவீத வரியை 18 சதவீதமாக டிரம்ப் குறைத்தார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்வதாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அபராதமாக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியையும் டிரம்ப் தற்போது ரத்து செய்திருக்கிறார். எனவே இனிமேல் இந்திய பொருட்களுக்கு வெறும் 18 சதவீத வரியை மட்டும் இந்தியா செலுத்தினால் போதுமானது குறிப்பிடத்தக்கது..
சொன்னது போலவே இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். மேலும், கூடுதல் வரியாக மேலும் 25 சதவீத வரியையும் விதித்தார். இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை இந்தியா செலுத்த வேண்டியிருந்தது.. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது.
அதேநேரம், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய பொருட்களுக்கான 25 சதவீத வரியை 18 சதவீதமாக டிரம்ப் குறைத்தார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்வதாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்