இனிமே நாங்க அண்ணன் - தம்பி!. வரியை குறைச்சிட்டேன்!.. இறங்கிவந்த டிரம்ப்!...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக பல நாடுகளுக்கும் வரியை அதிகமாக விதித்து விதித்து விளையாடி வருகிறார். அதை ஒரு மிரட்டலாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக சீனா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்தார். ரஷ்யாவிடம் கச்சை எண்ணை வாங்கினால் இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிப்பேன் என மிரட்டினார்.. அதன்பின் இந்திய பிரதமர் மோடியிடம் பேச முயற்சி செய்தேன்.. ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என கூறினார்.. ஒருபக்கம், அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியா வரியை உயர்த்தியது.
தற்போது இந்தியா அமெரிக்கா இடையே இருந்த வரி போர் முடிவுக்கு வந்திருக்கிறது.. இது பற்றி தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன்.. அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்திய அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது.. அதன்படி இந்தியா மீதான வரி விதிப்பை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 ஆக குறைக்கும்.
அமெரிக்கா மீதான வரிகளை இந்தியாவும் குறைக்கும்.. அமெரிக்க பொருள்கள் மீதான வர்த்தக தடைகளையும் இந்தியா முற்றிலும் நீக்கும்.. 500 பில்லியன் டாலருக்கு அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும் அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கும் மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார் என பதிவிட்டிருக்கிறார்.
எரிசக்தி, தொழில்நுட்பம், நிலக்கரி மற்றும் விவசாயத்துறைகளில் 500 மில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா முன்வந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதித்துள்ள வரிகள் மற்றும் வரி சாரா தடைகளை படிப்படியாக குறைத்து பூஜ்ஜியத்திற்கு கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் நம்புவதாக கூறியிருக்கிறார்..