வியாழன், 5 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 பிப்ரவரி 2026 (14:49 IST)

இந்தியா எங்ககிட்ட ஆயில் வாங்கலனா ஒன்னும் பிரச்சன இல்லை!.. ரஷ்யா கமெண்ட்!...

india russia
ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சொல்லி வந்தார். ஒரு கட்டத்தில் ரஷ்யவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு பல மடங்கு வரி விதிப்பேன் என்றெல்லாம் கூறினார். ஆனால், இந்தியா எந்த பதிலும் சொல்லவில்லை. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு 500 சதவீத வரியை விதிக்குக்ம் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதையடுத்து இந்தியா- அமெரிக்கா இடையே இருந்த வர்த்தக நல்லுறவு பாதிக்கப்பட்டது.. அதே ரம் சமீபத்தில் அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசி இந்த பிரச்சினையை சுமூக முடிவுக்கு கொண்டு வந்தனர். அதன்பின் இதுபற்றி தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட டிரம்ப் ‘ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா சொல்லிவிட்டது. எனவே இந்தியாவுக்கான 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்கிறேன்’ என சொல்லியிருந்தார்.

அந்த செய்தி வெளியானவுடன் அதுபற்றி கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் மளிகை எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக எதுவும் சொல்லவில்லை’ என்று கூறியிருந்தது. இந்நிலையில் அதுபற்றி மீண்டும் கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் மாளிகை ‘இந்தியா யாரிடமிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கலாம். அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.. ரஷ்யா மட்டுமே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளையர் கிடையாது. முந்தைய காலங்களில் பிற நாடுகளில் இருந்தும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியிருக்கிறது.. எனவே இதில் புதிதாக எதுவும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறது.