1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mansoor alikan fasting today in chennai

உடனே செய்யணும்!.. உண்ணாவிரதத்தை துவங்கிய மன்சூர் அலிகான்!..

mansoor
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மன்சூரலிகான். அதன்பின் தொடர்ந்து ஏராளமான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். சில படங்களை அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். திரைத்துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல வருபவர் மன்சூரலிகான்..

அடிக்கடி சர்ச்சையாக எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். சில மாதங்களுக்கு முன்பு கூட திரிஷா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி மன்னிப்பும் கேட்டார். ஒருபக்கம், ஆளும் ஒன்றிய அரசை தொடர்ந்து விமர்சித்தும் வருகிறார். அடிக்கடி வழக்குகளிலும் சிக்குவார்.

இந்நிலையில்தான் கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் மன்சூர் அலிகான். எழும்பூர் ராஜஸ்தான் மைதானத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி உண்ணாவிரதம் இருக்கிறார் மன்சூர் அலிகான்..
அடுத்த கட்டுரையில்
இன்னும் 15 நிமிடத்தில் வந்துவிடுவேன்.. பெற்றோர் திருமணநாள் விழாவுக்கு பைக்கில் வந்த இளைஞர்.. கடைசி வரை வரவில்லை.. பெரும் சோகம்..!