வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By BALA
Last Modified: புதன், 28 ஜனவரி 2026 (20:33 IST)

பெரிய போர்க்கப்பல் ஆன் தி வே!.. சரண்டர் ஆகுங்க!. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!...

donald
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஒருபக்கம் பல நாடுகளுக்கும் வரிகளை உயர்த்துகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 500 சதவீத வரி என அறிவித்தார். ஒரு பக்கம் பல நாடுகளையும் அவர் மிரட்டி வருகிறார். வெனிசுலா அதிபரை கைது செய்து சிறையில் அடைத்தார். கிரீன்லாந்து அமெரிக்காவுக்கே சொந்தம் அதை விரைவில் கைப்பற்றுவோம் என சொல்லி சர்ச்சையை கிளப்பினார்.

ஒருபக்கம் ஈரான் அதிபரையும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.. ஏனெனில் ஈரான் நாட்டில் அதிபர் மீது அதிருப்தியடைந்த அந்நாட்டு மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் கலவரமாக மாறியதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். பலரை ஈரான் அரசு தூக்கிலிட்டது.

எனவே ஈரான் ஈராநாட்டில் அமெரிக்க படைகளை களமிறக்க திட்டமிட்டுருக்கிறார் டொனல்ட் டிரம்ப். இந்நிலையில், ட்ரூத் என்கிற தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் ‘மிகப்பெரிய போர்க்கப்பல் படை ஈராணை நோக்கி அதி வேகமாக செல்கிறது.. ஈரான் அணு ஆயுதங்களை கைவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும்.. இல்லையெனில் வெனிசுலாவில் நடத்திய தாக்குதலை விட பேரழிவை ஏற்படுத்தும் மிக கடுமையான தாக்குதலை ஈரான் சந்திக்க நேரிடும்.. நேரம் கடந்து கொண்டிருக்கிறது’ என மிரட்டியிருக்கிறார்.