புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By BALA
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (12:24 IST)

இந்தியாவுக்கு வரி போடுவேன்!.. டிரம்ப் ஏற்றியதும்.. இறக்கியதும்!.. வரி கடந்து வந்த பாதை!....

donald
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 500 சதவீதம் வரிகளை விதிப்பேன் என சொல்லி மிரட்டினார்.. இந்தியாவுக்கு மட்டுமல்ல.. சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அதிக வரிகளை விதிப்பேன் என பயமுறுத்தினார்..

இதன் காரணமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த வர்த்தக நல்லுறவு பாதிக்கப்பட்டது.. ஒருபக்கம் இந்தியாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகமான வரி விதித்தது.. எனவே இது எப்போது முடிவுக்கு வரும் என இந்திய பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.. இந்நிலையில், அந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.. பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் கூடுதல்வரி நீக்கப்பட்டு 25 சதவீத வரி, 18 சதவீத வரியாக குறைக்கப்பட்டிருக்கிறது..

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கும் மேல் இந்தியாவுக்கான வரி விஷயத்தில் டிரம்ப் என்னென்ன செய்தார் என்பதை பார்ப்போம்:

கடந்த வருடம் ஏப்ரல் 2ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரியாக ஒரு பட்டியலை வெளியிட்டார் டிரம்ப். அதில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது..

ஏப்ரல் 10ம் தேதி அறிவிக்கப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் டிரம்ப்.. அதேநேரம் 10 சதவீத இறக்குமதி வரி எல்லா பொருள்களுக்கும் விதிக்கப்பட்டது..

ஜூலை 31ஆம் தேதி இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி அமுல்படுத்தி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இது 50 சதவீதமாக உயர்த்தப்படும் என டிரம்ப் எச்சரித்தார்..

ஆகஸ்ட் 7ம் தேதி ரஷ்யாவிடம் எண்ணெய் வர்த்தகம் செய்தால் கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தது அமெரிக்கா..

பிப்ரவரி 2ம் தேதியான நேற்று மோடி டிரம்ப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது..