1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona virus death count increases to 3,000

அச்சுறுத்தும் கொரோனாவால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ்
அச்சுறுத்தலான கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,977 ஆக உயர்ந்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக சீனாவை மட்டும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 
 
சீனாவை தொடர்ந்து தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவில் வூகான் நகரில் இருந்து பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலான கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,977 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும், உலகம் முழுவதும் 86,603 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7.569  பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன என தகவல் தெரிவிக்கின்றன. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வாழ விரும்ப மாட்டார்கள்: வெங்கையா நாயுடு!