திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (09:33 IST)

மோடி இந்தியர்: அவருக்கு குடியுரிமை சான்றிதழ் தேவையில்லை – ஆர் டி ஐ தகவல் !

பிரதமர் மோடி தனது குடியுரிமை சான்றிதழைக் காட்ட வேண்டும் என்ற வழக்குக்கு ஆர் டி ஐ மூலமாக பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தால் நாடு முழுவதும் கலவரங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பிரிவினரான பிறப்பு சான்றிதழை அடிப்படையாக வைத்து அரசு என்ஆர்சி கொண்டு வரப் பட போவதாக தெரிகிறது. ஒருவர் தான் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழைக் காட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஒருவர் பிறந்திருந்தாலும் அவரது தந்தை அல்லது அவரது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்களுக்கு முறையான பிறப்புச் சான்றிதழ் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ரீசுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடியின் குடியுரிமை சான்றிதழைக் காட்டுமாறு கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம் மோடி இந்திய குடிமகன் என்றும், அவர் பிறப்பால் இந்தியர் என்ற அந்தஸ்தை பெறுவதால் அவருக்கு குடியுரிமை சான்றிழ் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.