புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : சனி, 29 பிப்ரவரி 2020 (19:27 IST)

கொரோனா வைரஸ் வதந்தி...'டிக் -டாக்'கில் இணைந்த உலக சுகாதார அமைப்பு !

கொரோனா வைரஸ் வதந்தி...டிக்டாக்கில் இணைந்த உலக சுகாதார அமைப்பு !
கொரோனா குறித்த வதந்திகள் உலகம் முழுவதும் பரவலாகி வருகிறது. இந்நிலையில், இந்த வதந்திகளைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு 'டிக் - டாக்'கில் இணைந்துள்ளது.
 
சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ்  அந்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவுயதுடன், இத்தாலி, ஜெர்மனி, இரான், இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
 
இந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. 
 
இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே, கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டி உலக சுகாதார அமைப்பு, டிக்டாக் அமைப்பில் கணக்கு துவங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.