தமிழக பட்ஜெட் 2026-27.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி.. முழு விவரங்கள்...!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட், 2026-2027 நிதியாண்டிற்காக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் இந்த வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.22,089 கோடியும், எரிசக்தித் துறைக்கு ரூ.15,828 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,561 கோடியும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,852 கோடியும் நிதி ஒதுக்கீடு பெற பெற்றுள்ளன.தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பிற்கு ரூ.4,414 கோடி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,914 கோடி, நீதி நிர்வாகத்திற்கு ரூ.2,486 கோடி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறைக்கு ரூ.775 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி, வணிக வரிகள் துறைக்கு ரூ.651 கோடி, பத்திரப்பதிவுத் துறைக்கு ரூ.475 கோடி மற்றும் இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.435 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடுகள் கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
