1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (17:41 IST)

சோளத்தால் நிரப்பப்பட்ட தண்டவாளம்.. வைரல் புகைப்படம்

சோளத்தால் நிரப்பப்பட்ட தண்டவாளம்.. வைரல் புகைப்படம்
அமெரிக்காவில் சோளத்தால் நிரப்பப்பட்ட தண்டவாளத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா-கனடா எல்லையையொட்டியுள்ள மாநிலம் மின்னிசோட்டா. இந்த மாநிலத்தின் கிரிஸ்டல் டவுன் வழியாக கனடா பசிஃபிக் ரெயில்வே வழித்தடம் செல்கிறது.

இந்நிலையில் இந்த வழித்தடம் முழுவதும் சோளத்தால் நிரப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற சரக்கு ரயிலில் இருந்து சிந்திருக்கலாம் என கனடா பசிஃபிக் ரயில்வே கூறியுள்ளது. கொட்டப்பட்ட சோளத்தின் மதிப்பு 3,436 டாலர் மதிப்பு மிக்கது என கூறப்படுகிறது.