புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (16:53 IST)

பழிக்கு பழி... அமெரிக்கா மீது கடும் கோபத்தில் ஈரான் தலைவர்!

அமெரிக்காவின் முகத்தில் நேற்று இரவு அறை கொடுத்துள்ளோம் ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி பெருமிதம். 
 
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் தீர்மானத்தை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது. 
 
மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த ஈரான், தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகள் தளத்தின் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையாக தெரிய வரவில்லை.  
 
இது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், எல்லாம் நன்மைக்கே! ஈரான் ராணுவம் அமெரிக்காவில் உள்ள இரண்டு தளங்களை ராக்கெட்டால் தாக்கியுள்ளன. அமெரிக்க ராணுவத்திடம்தான் அதிநவீன ராணுவ தளவாடங்கள் உள்ளன. நாளை தாக்குதல் குறித்த அறிக்கையோடு வருகிறேன் என கூறியுள்ளார்.
 
இந்நிலையில் ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி,  சுலைமான் துணிச்சலான ராணுவ வீரர். அமெரிக்கர்களுக்கு எதிராகப் பாலஸ்தீன மக்களுக்கு உதவியவர் சுலைமான். சுலைமான் கொல்லப்பட்டதன் மூலம் நம்முடைய புரட்சி மீண்டும் புத்துயிர் பெற்று உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது. 
 
அமெரிக்காவின் முகத்தில் நேற்று இரவு அறை கொடுத்துள்ளோம். இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஊழல் படித்த செயல்கள் முடிவுக்கு வரவேண்டும். அமெரிக்காவின் அனைத்துத் தலையீடுகளும் முடிவுக்கு வர வேண்டும்.

ராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அதை நாம் எதிர்கொள்வோம். சுலைமான் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக ராணுவ நடவடிக்கை போதாது  எனத் தெரிவித்தார்.