புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (13:18 IST)

உக்ரைன் விமான விபத்து: பயணித்த 170 பேர் பரிதாப பலி

உக்ரைன் நாட்டு விமான விபத்தில் பயணிகள், ஊழியர்கள் என 170 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரான் மீது அமெரிக்க ட்ரோன் படைகள் தாக்குதல் நடத்தியதால் சுலைமானி என்ற ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 12 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. 
 
இந்த நிலையில் ஈரானில் உக்ரைன் நாட்டின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஈரான் விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் ஈரான் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது இந்த விமானத்தில் பயணம் செய்த 160 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் அனைவரும் உழிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.