1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2026 (08:34 IST)

மத்திய கிழக்கு போரால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

மத்திய கிழக்கு போரால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வா? மத்திய அரசு என்ன சொல்கிறது?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான மோதலால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 டாலராக அதிகரித்துள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் எரிபொருள் விலை உடனடியாக உயராது என மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு உறுதியளித்துள்ளது. 
 
எதிர்பார்ப்பை விட மிக அதிகமான விலை ஏற்றம் சர்வதேச சந்தையில் ஏற்பட்டால் மட்டுமே, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பொதுமக்கள் விலை உயர்வு குறித்து அச்சப்பட தேவையில்லை என்பதை மத்திய அரசின் இந்த விளக்கம் தெளிவுபடுத்துகிறது.
 
Edited by Siva