இரான் தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டிரோன் படை ஈரானில் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய தளபதி சுலைமானி உள்பட ஒரு சிலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டினர் தெரிவித்து வந்த நிலையில் இன்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது அதிரடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாக 12 ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்கியதில் அமெரிக்க படைக்கு அதிகபட்ச சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேதம் குறித்து நாளை தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்
இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த தகவலை அமெரிக்க தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் பதிலடி தாக்குதல் மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக பரவிவரும் தகவலால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என அமெரிக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருவதால் அமெரிக்க அதிபருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது