1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. US Embassies Under Attack: Middle East Tension Escalates

சவுதி அரேபியாவின் அமெரிக்க தூதரகத்தை ட்ரோன் வைத்து தாக்கிய ஈரான்.. பழிவாங்குவேன் என டிரம்ப் சபதம்

அமெரிக்கதூதரகம்
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று இரவு ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலில் கட்டிடத்திற்கு சேதங்கள் ஏற்பட்டதோடு, கரும்புகை சூழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதற்கு பதிலடியாக, உயிரிழந்த ஆறு அமெரிக்க வீரர்களுக்காகவும், தூதரக தாக்குதலுக்காகவும் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் சபதம் எடுத்துள்ளார்.
 
சவுதி மட்டுமல்லாது குவைத், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. வன்முறை அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு வாஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது. 
 
பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூரிலும் அமெரிக்க தூதரகங்களுக்கு வெளியே நடந்த போராட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வளைகுடா பகுதியில் உள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் பெரும் கவலை கொண்டுள்ளன.
 
Edited by Siva
About Writer
Siva