1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. amerca asking americans to quit gulf countires

போர் எதிரொலி!.. 14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!...

war
ஈரானுடன் நடத்தப்பட்ட அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.. மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
அவர் மட்டுமல்ல அவரின் குடும்பத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் அதற்கு தாக்குதலில் பலியானதாக சொல்லப்படுகிறது..

இதனால் கோபமடைந்த ஈரான் பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ராணுவ தளங்கள் அமைந்திருக்கும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது..

சவுதி அரேபியாவில் சில இடங்களை ஈரான் ராணுவம் தாக்கியது.. புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் சில நட்சத்திர ஹோட்டல் மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.. இதனால் அனைத்து வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போயிருக்கிறது.

துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அதேபோல், சுற்றுலாவுக்காக பல அமெரிக்கர்களும் சென்றுள்ளனர். இந்நிலையில், குவைத், ஈரான், பஹ்ரைன் போன்ற 14 நாடுகளில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறும்படி அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.
About Writer
BALA