1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. china warning nelap will face another waterflood

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

nepal
வடக்கு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல வீடுகளும், வாகனங்களும், கட்டிடங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.  அதோடு சேர்ந்து பல மனிதர்களும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் 300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

மேலும் 1100 க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளனர். அவர்களில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்களும் அடக்கம். நேபாளத்தின் மேல் பகுதியில் பனிப்பாறை உடைந்து அங்கிருந்த நீர் வேகமாக வெளியேறியது இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்த வெள்ளத்தால் நேபாளமே உருக்குலைந்து போயிருக்கிறது. பல முக்கியமான கட்டிடங்கள் சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்டது. இந்நிலையில்தான், நேபாளத்திற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருப்பதாக சீனா எச்சரிக்கை செய்திருக்கிறது.

சீனா - நேபாள எல்லையில் Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆறுகள் இணையும் இடத்தில் நிலச்சரிவு காரணமாக ராட்சச தடுப்பு ஏரி திடீரென உருவாகி நிரம்பி வழியும் நிலையில் இருப்பதாக சீன அரசு அவசர எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அடுத்த 72 மணி நேரத்திற்குள் இந்த அணை உடைந்து இரண்டாம் கட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது எனவும் அந்த நாடு தெரிவித்திருக்கிறது.

புதிதாக உருவாகியிருக்கும் அந்த ஏரியில் இன்று காலை நிலவரப்படி 20 லட்சம் கன மீட்டர் தண்ணீர் இருக்கிறது எனவும், ஏற்கனவே ஏறி நிரம்பி ததும்ப ஆரம்பித்துவிட்டது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..