1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. higher offcials make military man happy in the function

யாருமே வரல!.. தனியாக நின்ற ராணுவ வீரர்.. கட்டிப்பிடித்த உயர் அதிகாரி!.. வைரல் வீடியோ!...

viral video
நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் ராணுவ வீரர்கள். நாட்டின் பாதுகாப்பு விருது எல்லையில் நின்று எதிரிகளோடு சண்டை செய்வர்கள். அவர்கள் அவர்களால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில் விடுமுறை கிடைக்காது. மனைவி குழந்தைகளை கூட பல மாதங்கள் நேரில் பார்க்க முடியாது.

தனது முழு வாழ்வின் பெரும்பாலான நேரத்தை அவர்கள் நாட்டுக்காகவே செலவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட ராணுவ வீரர்கள் எப்போதுமே போற்றத்தக்கவர்கள். இந்நிலையில்தான் ஒரு ராணுவ வீரர் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

பொதுவாக ராணுவ பயிற்சி முடிந்து ஒரு ராணுவ வீரர் முழு தகுதியுடன் தேர்வு செய்யப்பட்டவுடன் ஒரு விழாவை நடத்துவார்கள். அந்த விழாவில் ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்தித்து தனது சந்தோஷத்தை அவர்களுன் பகிர்ந்துகொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ராணுவ வீரர்கள் நிற்பார்கள். அவர்களின் குடும்பத்தினர் சென்று தங்களின் மகிழ்ச்சியை ராணுவ வீரர்களிடம் வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில்தான், சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்த போது ஒரு ராணுவ வீரரிடம் யாரும் செல்லவில்லை. எனவே, அவர் தனியாக நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரின் உயர் அதிகாரி அவரின் அருகில் சென்று அவரை கட்டியணைத்தார். இதனால் நெகிழ்ச்சியுடன் அந்த ராணுவ வீரர் கண்ணீர் விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.



About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது!.. ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்!...