சீனப்பொருட்கள்!. இந்தியா சதி செய்கிறது!.. வெள்ளை மாளிகை குமுறல்!.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு வரிகளை விதித்தார். இந்தியா, சீனா ஆகியவை ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதே அதற்கு முக்கிய காரணம்.
இது டொனால்ட் டிரம்புக்கு பிடிக்கவில்லை. எனவே இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகளவு உயர்த்தினார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் இதை கண்டித்ததால் அதிலிருந்து பின் வாங்கினார். ஆனாலும் இந்தியா மற்றும் சீனாவுக்கு 100 சதவீத வரியை விதிக்கும் மசோதாவை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்தியாவின் சென்னை, புனே, குஜராத் உற்பத்தி மண்டலங்கள் அமெரிக்க தொழில் நகரங்களுக்கு போட்டியாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. இந்த நகரங்களை Ugly Sister Cities என தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பகக்த்தில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை அமெரிக்க வரிகளை தவிர்ப்பதற்காக சீனா பொருட்கள் இந்தியா வழியாக அனுப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது.