நடுவானில் விமானிக்கு கத்திக்குத்து!.. 17 ஆயிரம் அடி கீழே போன விமானம்!...
துபாயிலிருந்து இஸ்ரேல் டெல் அவில் நகருக்கு ஏர் துபாய் விமானம் இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர். விமானம் சவுதி - ஜோர்டான் வான் எல்லையில் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானிக்கும், துணை விமானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது விமானியை துணை விமானி கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. அதோடு விமானத்தை அவர் கடத்தவும் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது..
ஆனாலும், விமானி சாதுர்யமாக செயல்பட்டு சவுதி அரேபியாவில் விமானத்தை தரை இறக்கிவிட்டார். அதற்கு பயணிகள் உடையில் இருந்த சில விமானிகள் உதவி செய்ததாக சொல்லப்படுகிறது.
முதல் கட்ட விசாரணையில் விமானத்தை இயக்கியது ஐக்கிய அரபு அமீரக நாட்டை சேர்ந்தவர் எனவும் விமானத்தை கடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர் ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் பயங்கரவாத செயலாக இருக்கலாம் என இஸ்ரேல் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது விமானத்தில் இருந்த பயணிகள் மகிழ்ச்சியில் கைத்தட்டி விமானியை பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.